ரஜினிகாந்த் ஆசீர்வாதம் மட்டுமே போதும், மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன் என்று அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றத்தின் பயணம் விரைவில் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்னை நமது நாட்டிற்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. நமது தலைவருக்கு உடல் நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக, அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் […]