2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை பெறும் இந்திய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் கடந்த டிசம்பர் 20ம் தேதி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை […]
அர்ஜுனா விருது வென்ற 25 பேரின் பட்டியலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. தேசிய விளையாட்டு விருதுகள் 2022 க்கான வீரர்கள் பட்டியலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசாங்கம் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா […]
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரையும், அர்ஜுனா விருதுக்கு கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. தேசிய அளவில் விளையாட்டுத் துறையில், சிறந்த முறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய மிக உயரிய விருது தான் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. முன்னாள் இந்திய பிரதமர், மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக […]
எனக்கும் அர்ஜுனா விருது என்பது கனவு. அந்த விருதை பெற இன்னும் வேறு என்னென்ன பதக்கங்கள் வாங்க வேண்டும். – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பிரதமர் மோடிக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு அந்தாண்டு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறந்த விளையாட்டு […]
ஆசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று, மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன். தமிழக அரசு அரசு சார்பாக ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. சென்னை கே.கே. நகரை சேர்ந்த பாஸ்கரன் கடந்த 2018-ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாடிபில்டிங் போட்டி மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாடிபில்டிங் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். இந்நிலையில், நடப்பு ஆண்டில் மத்திய அரசு அவருக்கு […]
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீரக்கனையை பெருமைப் படுத்தும் விதமாக மத்திய அரசு அர்ஜூனா விருதை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட 19 விளையாடு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீரக்கனையை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு அர்ஜூனா விருதை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்திய பெண்கள் அணியின் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அர்ஜூனா விருதுக்கான பெயர் பட்டியலை பிசிசிஐ அனுப்பியது. அதில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி , பும்ரா,ஆல் ரவுண்டர் ஜடேஜா மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் […]
அர்ஜுனா விருதுக்கு வீரர்களின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த ஆண்டு அர்ஜூனா விருதுக்கு பரிந்துறைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்தடகள வீரர்கள் நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், ஹிமா தாஸ் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கோல்ஃப் வீரர் சுபாங்கர் ஷர்மா பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி குத்துச்சண்டை வீரர் சதீஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. DINASUVADU