அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை கடத்தி சென்று முத்தம் தந்த இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. பைக்கில் கடத்தி சென்று சிறுமிக்கு முத்தம் தந்த மாரிமுத்து என்ற இளைஞருக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அரியலூர் மகிளா நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.