அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் விடுதியில் தங்கி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி தற்கொலை விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மாணவியின் […]