அகரம் அகழாய்வில் 256 செ.மீ ஆழத்தில் தொன்மை வாய்ந்த சுடுமண் முத்திரை கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தொன்மையான சுடுமண் முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்து தொல்லியல் அதிகாரிகள் கூறுகையில், இந்த சுடுமண்ணால் ஆன முத்திரை 256 சென்டிமீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், இந்த முத்திரையின் தலைப்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், உடல்பகுதி உட்குழிவுள்ள உருளை […]
அரியலூரில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் ராஜேந்திர சோழன் அரண்மனை செங்கல் சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தமிழக தொல்லியல்துறை சார்பில் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஆய்வில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு ஆணிகள், கூரை ஓடுகள், மண் பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கண்ணாடி வளையல் மற்றும் அரண்மனையிருந்ததற்கான […]