இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தமிழில் இயக்கிய “ஹர ஹர மஹாதேவகி”, “இருட்டு அறையில் முரட்டு குத்து”, “கஜினிகாந்த்” ஆகிய திரைப்படங்களை இயக்கி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் புதிய படத்தை இயக்க உள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் , நடிகைகள் பற்றிய விபரம் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.