அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த 7-ஆம் தேதியன்று, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த கௌதம் நகரில் இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு இறுதியில் மோதலாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் கத்தி, பாட்டில் என கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இந்த மோதலில் அர்ஜுன், சூர்யா என இருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். […]