திண்டுக்கல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு விநியோகம் செய்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரில் திருப்பதியில் உள்ள கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, தற்போது ஏழுமலையான் கோவிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கலில் உள்ள ஏ.ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு […]