திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததாக உணவுப்பொருள் ஆய்வுக்குழு கூறி முதலமைச்சரின் குற்றசாட்டை உறுதிப்படுத்தியது. திருப்பதி கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்ததாக கூறப்பட்ட விவகாரம் நாடு முழுக்க பேசு பொருளாக மாறியது. மேலும், நேற்று திருப்பதி தேவஸ்தானம் […]