சென்னை : நேற்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்கள் வழங்கி பட்டாசு வெடித்து பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். பட்டாசு வெடிக்க, நேர கட்டுப்பாடு, பசுமை பட்டாசுகள் என கூறினாலும் அதனால் ஏற்படும் காற்று மாசுவின் அளவும் ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிக மாசடைந்த மாவட்டமாக தலைநகர் சென்னை உருவெடுத்துள்ளது. தீபாவளி தினத்தன்று சென்னை மாநகராட்சியின் காற்று மாசு (AQI […]
டெல்லி : தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் காரணமாகவும், அதீத வாகன பயன்பாடு காரணமாகவும் டெல்லி காற்றின் தரம் மிக மோசமாக மாறி வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் AQI அளவீட்டின் படி 300ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆனந்த் விஹாரி பகுதியில் AQI அளவீடு 361ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக சராசரி […]
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மீதமுள்ள விவசாய பொருட்களை எரிப்பதால் வரும் புகை டெல்லி காற்றை அதிகளவில் பாதிக்கிறது. மேலும், டெல்லியில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக அமைகிறது. அதனை கட்டுப்படுத்தவும், வாகன கட்டுப்பாட்டை அரசு அவ்வப்போது […]
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் செய்திகள் தான் வெளியாகி கொண்டு இருந்தன. அதனை தவிர்த்து தற்போது தலைநகர் டெல்லியின் பருவநிலையும் மாறி வருகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலானா குளிர் பதிவாகியுள்ளது. அதாவது இமாச்சல் பிரதேசம் சிம்லாவை விட அதிகமாக குளிர் பதிவாகியுளளது. மோசமடையும் காற்றின் தரம்… இந்தியாவின் டாப் 10 லிஸ்ட் இதோ… டெல்லியில் இன்று காலை பதிவான குளிரின் அளவு 4.9 டிகிரி செல்சீயஸ் ஆகும். அதுவே சிம்லாவில் […]
டெல்லி:தலைநகரில் மாசு அளவைக் கட்டுப்படுத்த டெல்லியில் இரண்டு நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக புகை மூட்டத்தில்(காற்று மாசுபாட்டில்) மூழ்கியுள்ளது.இதனால்,வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன.அங்கு நிலவும் காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் உள்ளது.இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி […]