பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவின் மாற்றங்கள் என்னென்ன? என்பதை காணலாம். உதகையில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டமசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக […]