Apple Warns : தண்ணீரில் விழுந்த ஆப்பிள் ஐபோனை அரிசியில் வைக்கும் பழக்கத்தை தவிர்க்குமாறு தங்களது பயனர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக நாம் மொபைல் தண்ணீரில் விழுந்தாலும், மழையில் நனைந்தாலும், உடனே பேட்டரியை கழட்டிவிட்டு நம் வீட்டில் உள்ள அரிசி பானை அல்லது அரிசி பையில் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி செய்யும்பட்சத்தில் செல்போனில் புகுந்துள்ள தண்ணீர் காயக்கூடும் அல்லது குறையும் என நம்பப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரிசி அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் […]