தமிழகத்தில் முதல் முறையாக உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் D.M.S வளாகத்தில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பாயம் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் உணவு பாதுகாப்பு நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும் இதன் தலைமை அதிகாரியாக நீதிபதி ஜாகிர் உசேன் பொறுப்பேற்றுள்ளார்.இதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு வழக்குகள் இனிமேல் இந்த தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படும்