இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக வழக்கு தொடர்பாக ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர். கடந்த 2018-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் சம்மனை பெற்றுக்கொண்ட ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த அக்டோபர் மாதம் […]