கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் இருந்து வந்த 8 இந்தியர்கள் வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறப்படும் புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது. உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 8 […]
பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அறப்போர் இயக்கம் தகவல். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]
அதிமுக பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக சசிகலா மேல்முறையீடு. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2வது வாரம் விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், 2021 ஜூன் 20-ம் தேதி மணிகண்டன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் […]
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல். முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, விதிமுறைகளை பின்பற்றாமல் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சொகுசு கார் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு. கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண […]
சொகுசு கார் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு. கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு […]
திமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசி , தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் அமைச்சரின் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.