சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அனுமதி தற்காலிக ரத்து. கொரோனா நோய் தொற்று காலத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் சிகிச்சைக்கு அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வண்ணம் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வாங்கும் கட்டணங்கள் குறித்து அரசு தொடர்ந்து […]