உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சில வருடங்களுக்கு முன்னர் பட ஷூட்டிங்கின் போது காலில் அடிபட்டது. அதற்காக கமல்ஹாசன் காலில் சிறிய உலோக துண்டு வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த சிறிய உலோக துண்டை கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டார். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். மருத்துவமனை ஓய்வை அடுத்து, நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தனது கட்சி நிர்வாகிகளை […]
சென்னை : மதுரவாயலில் நிக்கில்சன் என்பவர் தனது உறவினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார். அனுமதித்து விட்டு வீட்டுக்கு திரும்புகையில் தான் கொண்டு வந்த ஆடி சொகுசு காரை மறந்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்சை ஓட்டி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன்தான் மனைவி பார்த்து அதிர்ச்சியாகி பின்னர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதியன்று இறந்தார். அவரது மறைவில் சந்தேகம் உள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. அதில் அப்பல்லோவில் மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பங்கேற்ற மருத்துவர் பாலாஜியை விசாரிக்கையில் அவர், தான் ஜெயலிதாவுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. ஜெவுக்கு லண்டன் எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் மருத்துவம் பார்த்தனர். மேலும் ஜெ இட்லி […]
மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. அதனை விசாரணை கமிசன் அமைத்து கண்டறியவேண்டும் என பல்வேறு கட்சியினரும், தொண்டர்களும், கூறிவரும் நிலையில் தற்போது விசாரணை கமிசன், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக தெரிகிறது. மேலும் முதல்வர், துணை முதல்வர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் என எல்லோரையும் விசாரிக்க உள்ளதாக் தெரிகிறது.