குடியரசு தலைவர் மனம் புண்பட்டிருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, என்னுடைய கருத்தால் குடியரசு தலைவர் மனம் புண்பட்டிருந்தால் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க தயார். குடியரசுத் தலைவரை அவமதிப்பது குறித்து என்னால் கற்பனையும் செய்ய முடியாது. குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை, தவறுதலாக பேசிவிட்டேன். அவர்கள் விரும்பினால் என்னை தூக்கிலிடலாம், […]