Ajith Kumar: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜித்திற்கு காதுக்கு அருகில் இருந்த வீக்கத்தை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. READ MORE – வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்! நேற்றிலிருந்தே நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய […]
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல இருந்தார். இதற்காக அவர் மீனப்பாக்கம் விமான நிலையம் வந்த நிலையில், விசாவில் பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டாா். இதன்பின், விசா பிரச்சனை முடிந்து நேற்று மாலை ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் புறப்பட விமான நிலையம் […]
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம். கடந்த 20ம் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மதுசூதனை பார்க்க மருத்துவமனை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை […]
பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2-ஆம் தேதி சவுரவ் கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து கங்குலி வீடு திரும்பிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். புது வருட பிறப்பை பலரும் இந்த வருடம் இனிய வருடமாக அமையட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி புத்தாண்டு வாழ்த்துக் கூறியதை […]
ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பின்போது படப்பிடிப்பில் இருந்த சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், பரிசோதனை முடிவு நெகட்டிவ் வந்தது. இதனால், ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், இன்று ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி ரத்தத்தை சீராக வைத்திருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கிய சிகிச்சை பற்றி மருத்துவ நிபுணர் குழு மட்டுமே ஆராய முடியும் என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை ஒரு தலைப்பட்சமாகவும், முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகவும், அதன் வரம்பை மீறுவதாகவும், தவறான எண்ணத்துடனும் உள்ளது என கூறியுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22 -ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு ஆறுமுகசாமி ஆணைய […]
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த […]