ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து, இன்று ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை […]