தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் நாளை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நிலையில், மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி […]