இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரெமோ சென், உள்ளிட்டோர் பலர் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் எனவும், அதில் தனுஷ் கதாநாயகனாக நடிப்பார் எனவும் இயக்குனர் செல்வராகவன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து படம் எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் காத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், […]