மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று ‘நமோ ஹாட்ரிக்’ என்ற வார்த்தைகள் பொறித்த காவி நிற உடையை அணிந்தபடி பாராளுமன்றத்திற்கு வருகை தந்தது சமூகவலைதளங்களில் விவாத பொருளானது. அதாவது, வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பதிவு செய்வார் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் ஹூடி உடை அணிந்திருந்த வீடியோவையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுவதைக் பார்க்க முடிகிறது. அதில், “பிரதமர் […]
பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், DAP உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். DAP உரம் […]
நாட்டில் 15-29 வயது உட்பட்டோருக்கான “மேரா யுவா பாரத்” (My Bharat) எனும் புதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர், இளைஞர் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், தன்னாட்சி நிறுவனமான மேரா யுவ பாரதத்தை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாட்டில் உள்ள 40 கோடி இளையோர்களை […]
உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கடந்த மாதம் ரக்ஷாபந்தன் பண்டிகையின்போது உஜ்வாலா திட்ட கேஸ் சிலிண்டர் விலை […]
தீபாவளி ஆஃபராக எல்பிஜி மீது, எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொது மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு(LPG) விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.22,000 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன்(IOC), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் […]
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது மத்திய அரசு. அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார். தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் என அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 2022 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், டெல்லி, […]
மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மத்திய அமைச்சரை ஒப்புதல். 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உத்தரவாதங்களில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்துக்கு பின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். அதன்படி, U-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அக்டோபர் 11 முதல் 30 வரை […]
இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும் என அமைச்சர் தகவல். கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும். GeM (Government e-Marketplace) போர்ட்டலை அறிமுகம் செய்த பிறகு, சுய […]
மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிய காட்சி வெளியாகியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் உலக வணிக கண்காட்சியில் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று நடனமாடிய நடிகர் ரன்வீர் சிங், மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை நடனமாடும்படி அழைத்தார். உடனடியாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும், ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
கர்நாடகா பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யாவுடன் வாலிபால் விளையாடிய, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர். கர்நாடகாவில் சென்ற் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், அங்கு விளையாட்டு மைதானம் ஒன்றை பார்வையிட்டார். அப்போது கர்நாடகா பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யாவுடன் வாலிபால் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அமைச்சர் அனுராக் தாகூர் பதிவிட்டுள்ளார். How did you spend your Sunday? Sh @Tejasvi_Surya this was amazingly fun ! • Minister 6s v MP […]
e-RUPI எனப்படும் மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகபடுத்துகிறார். QR CODE அல்லது SMS மூலம் பயனாளிகளின் செல்போன்களுக்கே அனுப்பப்படும் e-RUPI எனப்படும் மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிமுகம் செய்யவுள்ளார். இந்த திட்டம் மின்னணு முறை மூலமாக மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு சென்று சேர உதவும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. e-RUPI மின்னணு பரிவர்த்தனை திட்டத்தை (National Payments Corporation) நிறுவனம், அதன் […]
சர்ச்சை பேச்சு தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் 3 நாட்களுக்கும், எம்.பி., பர்வேஸ் வர்மா 4 நாட்களுக்கும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தடை விதித்தது தேர்தல் ஆணையம். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் தலைநகர் டெல்லியில் தீவிரமைடைந்து […]
மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்து வந்த நிலையில் அவர்களை பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து பாஜக நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.தற்போது […]
தேசத்துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் பொதுக் கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது .பிப்ரவரி 11-ஆம் […]