டெல்லி: கள்ளக்குறிச்சி விவகாரத்தை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தமிழக எம்பிக்களை விமர்சனம் செய்துள்ளார். 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற விவாதங்களுக்காக தொடங்கிய கூட்டத்தொடர் முழுவதும் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர் கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டு இன்று மீண்டும் கூடியது. இன்றைய நாள் அவையின் தொடக்கத்திலேய நீட் விவகாரம் […]
Union Cabinet approved : உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். Read […]
தவறான தகவல்களை பரப்பியதற்காக 104 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல்களுக்கு வரைமுறையோ எந்தவித கட்டுப்பாடோ பெருமளவில் வகுக்கப்படவில்லை, இதனால் பல யூடியூபர்கள் போலியான தகவல்களை பரப்புவதற்காக சேனல்கள் தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். மக்களும் எது சரியான செய்தி என்று அறியாமலே தாங்கள் பார்த்த வீடியோவில் வரும் செய்தி உண்மை என நம்பி விடுகிறார்கள். இந்த நிலையில் தவறான தகவல்களை பரப்பியதாகக்கூறி 104 யூடியூப் சேனல்கள் மற்றும் 45 […]
பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பையை இந்தியா புறக்கணித்தால் 2023 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்குபெறாது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில், இந்தியா கலந்துகொள்ள வில்லையெனில், பாகிஸ்தானும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார். ரமிஸ் ராஜா, இந்தியா இங்கு வந்தால், பாகிஸ்தான் இந்தியாவிற்கு […]
2021-22 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 இணையதள பக்கங்கள் ஆகியவற்றை அரசாங்கம் முடக்கியதாகவும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் 69A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். பாஜக எம்பி ராகேஷ் சின்ஹா, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போலி கணக்குகளைப் பயன்படுத்தி “இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில்” ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை […]
மதுரை:தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? மாணவர்களின் வாய்ப்பினை பிரசார் பாரதியின் விதியை உடனே மாற்ற வேண்டும் என்று கோரி மத்திய அமைச்சருக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம். தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? என்றும்,தமிழ்நாடு மாணவர்களின் வாய்ப்பினை பாதிக்கும் பிரசார் பாரதியின் விதியை உடனே மாற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மற்றும் பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் சசி எஸ்.வேம்பதி […]
வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று நரேந்திர மோடி […]
ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பர்மிங்காமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் இருந்து வெளியேற ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. ஹாக்கி இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து வெளியேற முடிவு செய்தது. பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுக்கும் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுக்கும் இடையே 32 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறியது. ஹாக்கி இந்தியா தனது அறிக்கையில், […]
சிறப்பு எஃகு உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.6,322 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டுத்தொடர் தற்போது நடைபெறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடுவில் நடந்துள்ளது. வழக்கமாக அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறும். ஆனால், பக்ரீத் விடுமுறை காரணமாக, இந்த கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், சிறப்பு எஃகு இரும்பு தொழில்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த […]
ரூ.2000 நோட்டு அச்சடிப்பை கைவிடப்படுவதாக வெளியாகிய தகவலுக்கு பாரளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் லோக்சபாவில் 2019 – 20ம் நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க, ‘ஆர்டர்’ வழங்கவில்லை . அதேநேரத்தில் நோட்டுக்கள் அச்சடிப்பதை கைவிடும் முடிவும் எடுக்கப்படவில்லை. பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளில் ‘ஏ.டி.எம்களில் மட்டும் தான் 2,000 ரூபாய்க்கு […]
காஷ்மீர் விவகாரத்தில் முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உலக நாடுகள் இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கிறது’. காஷ்மீர் […]