டெல்லி : இலங்கை அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திஸாநாயக்க, முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேசினார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு பேசிய இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்க, இரு நாட்டு உறவுகள், இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றியும் பேசினார். மேலும், […]
டெல்லி: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அனுர குமார திசநாயகா, இந்தியா வருகை தந்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்றைய தினம் இந்தியா வந்த அவரை, மத்திய அமைச்சர் எல். முருகன் வரவேற்றார். இந்த நிலையில், இன்று காலை புது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லதிற்கு வருகை புரிந்த இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயகேவை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். இலங்கையில் செப்டம்பரில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
கொழும்பு : இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா அமோக வெற்றி பெற்று இலங்கையின் அதிபராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, இலங்கையில் கடந்த நவ-14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், மீண்டும் அதிபர் அனுரா குமார கட்சி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில், நேற்று இலங்கையில் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூர்ய பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் தனது வெளிநாட்டு […]
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக கட்சி (ஜேவிபி கட்சி) அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ‘ஹரிணி அமரசூரிய’ பதவியேற்றுக் கொண்டார். அதே நேரம் புதிய அமைச்சரவையும் அதிபர் அநுர குமர முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டது. இலங்கையில் அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் இடதுசாரி கட்சியான ஜேவிபி கூட்டணியுடன் களமிறங்கியது. நடைபெற்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத […]
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க பதவி ஏற்றார். அதன் பிறகு நாட்டில் சட்டதிருத்தங்களை விரைவாக கொண்டு வர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதமே இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் இலங்கை புதிய அதிபர். அதன் பிறகு இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று (நவம்பர் 14) முடிந்து இன்று […]
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை வாக்குப்பதிவு செய்யப்படும், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி களமிறங்குகிறது. மேலும், ராஜபக்சேக்களின் இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய […]
யாழ்ப்பாணம் : இலங்கையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் அதிபருக்கு தான் அதிக செல்வாக்கு என்றாலும், நாட்டில் சட்ட திருத்தங்களை கொண்டு வர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டியது அவசியம். இலங்கையில் உள்ள 225 இடங்களில் மக்கள் தேர்வு செய்யும் 196 இடங்களில் அதிக இடங்களை புதிய அரசாங்கம் பெற வேண்டும். ஏற்கனவே 4 எம்பிகளை மட்டுமே கொண்டிருந்த தேசிய மக்கள் கட்சி இந்த முறை அதிக தொகுதிகளை […]
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார். இந்நிலையில், அந்நாட்டு இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் கட்சியின் எம்.பி. ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில்ஹரிணி அமரசூரியவுக்கு, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய, நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், […]
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றது. தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருந்தாலும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் ஜனதா விமுக்தி பெரமுன […]
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா களம் கண்டார். அதே நேரத்தில் இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவரான அனுரா குமாரா திஸாநாயக்க போட்டியிட்டார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் இழுபறி நீடித்த நிலையில் 2-வது விருப்ப […]