ரூபாலி கங்குலி அதிக சம்பளம் வாங்கும் இந்திய தொலைக்காட்சி நடிகையாக உள்ளார். ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது. நடிகை ரூபாலி கங்குலி ‘அனுபமா’ (Anupamaa) என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு வயது 44. இவர் தற்போது இந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ரூபாலி மூத்த நடிகை என்பதால் ஒரு நாளைக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் இந்த சீரியலில் நடிக்க தொடங்கினார். […]