நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டி ஒன்றில் […]