கேரளாவில் கோழிக்கோடு அருகே பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் அனைத்து லாரிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து கோழிப்பண்ணைகளியும் தீவிர சோதனையிடப்பட்டு வருவதாக கூறினார். இதனிடையே கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த 12 ஆயிரம் கோழி, வாத்துகள் அழிக்க உத்தரவிட்டுள்ளதுடன், 1 கி.மீ. […]