முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார். முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ரூ.200 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மக்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சேவூர் கிராம மக்கள் கையெழுத்திட்டு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016-21 வரை அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி 1100% மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலும் சேவூர் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், தமிழக அரசின் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு என வேலுமணி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தன் […]
எஸ்பி வேலுமணி தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பான வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற. டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணியின் மனுவை உயர்நீதிமன்ற அமர்வு விசாரிப்பதற்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு […]