நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற காரணத்தால், அரசு பணியில் இருந்து சவுக்கு சங்கர் நிரந்தரமாக நீக்கம். அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. நீதித்துறை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் உள்ளார் சவுக்கு சங்கர். கடந்த ஜூலை 22-ம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது என்று ஒரு யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். […]
முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு. கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தற்போது நிறைவு பெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக […]
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள் கைது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதால், கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டுள்ளனர். அப்போது, காவல்துறைக்கும், வீட்டின் முன்பு திரண்டுள்ள ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கோவையில் வேலுமணி வீட்டில் நடந்து வரும் […]
ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி […]
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிகளுக்கு, டெண்டர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து எஸ்.பி. […]