திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். பணத்துடன் […]