தூத்துக்குடி: கடந்த 2018 மே 22ஆம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தபட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கை மனித உரிமை ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளையும், சம்பவம் […]
சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கடந்த 2006 – 2011ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதலமைச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும், முந்தைய […]
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவுத் துறை அமைச்சராக இருந்த போது, பொருட்கள் கொள்முதலில், ரூ.350 கோடிக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த புகழேந்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்டத்தில் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்ட ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்திருந்தார். பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு […]
அமைச்சர்கள் உதயநிதி , அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு என கூறி சிலர் வசூலித்ததாக லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெற உள்ளதாக கூறி சிலர் நான்கொடை வசூல் செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்களிடம் இந்த வசூல் வேட்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை லஞ்ச ஒழிப்பு துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் […]