Tag: answer sheet

காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும்- தேர்வுத்துறைஉத்தரவு.!

மதிப்பெண்பணிகளுக்காக காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 11-ம் வகுப்புக்கு ஒரு பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ,மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், 10, 11-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் தயாரிப்பு பணிகளுக்காக காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் 10, 11-ம் வகுப்பு […]

answer sheet 2 Min Read
Default Image

தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்.!

11,12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதையடுத்து, 11 ஆம் வகுப்புக்கு மார்ச் 26 ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதி நடத்தப்படும் […]

answer sheet 3 Min Read
Default Image

விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக 3,000 பள்ளிகள் தேர்வு – அமைச்சர்

சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  சிபிஎஸ்இ விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக நாடு முழுவதும் 3,000 பள்ளிகள் தேர்வு செய்துள்ளோம் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். மேலும், 1.5 கோடி விடைத்தாள்களை இந்த மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று அமைச்சர் […]

#Exam 3 Min Read
Default Image

ஆசிரியரிடம் விடைத்தாளில் கோரிக்கை வைத்த மாணவன்.! புகைப்படத்தை வெளியிட்ட ஆசிரியர்.!

அமெரிக்காவில் கெண்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் விடைத்தாளை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் மாணவன் 94 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், தனக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் போனஸ் புள்ளிகளை, யார் குறைந்த மதிப்பெண் பெற்று இருக்கிறார்களோ அவர்களுக்கு வழங்க முடியுமா என்று ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியிருந்தான். இதனை பார்த்து வியப்படைந்த ஆசிரியர் சிறுவனின் பெருந்தன்மையை எண்ணி அவனது விடைத்தாளை புகைப்படம் எடுத்து அவரது முகநூலில் பதிவிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை […]

#student 2 Min Read
Default Image