அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு அழைப்பு. அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்டமான ராமர் கோயில் விழா மேடையில் பிரதமர் உட்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு 175 பேருக்கு அழைப்புகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் வழக்குத் தொடுப்பவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி ஆகஸ்ட்-5 ம் தேதி விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. […]