தனது 24-வது பிறந்தநாளை கொண்டாடும் கொடி பட நடிகை. நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இன்று தனது 24-வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இணைய பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.