சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்ததாக ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபிறகு விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது வரும் ஏப்ரல் 17ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. கோடை வெயில் […]