பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள், ட்ராலி ஆகியவற்றை உடைத்ததாக தவெக தொண்டர்கள் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தவெக பூத் கமிட்டி மாநாடு நேற்று, இன்றும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவை விமான நிலையம் வந்த அக்கட்சியின் தலைவர் விஜயை, தவெக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். சுமார் 2,000 பேர் […]