ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அடுத்தவாரம் அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2 அரை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட்,ஒருநாள்,டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பிசிசிஐ ஆஸ்திரேலியாவில் கொரோனா தனிமைப்படுத்தல் விதிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் காரணத்தால் இன்னும் அட்டவணை உறுதிசெய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார்/\. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை 1ந்தேதி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றார். நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டார். இப்பொறுப்பிற்கு6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் […]
தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதியமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் திருத்திய வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்.,1 தேதி முதல் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத்திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பல இடங்களில் பயோமெட்ரிக் சரியாக இயங்காததால் மக்கள் சிரமப்பட்டனர்.இதனால் ரேஷன் பொருட்களை பெறுவதில் தேக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தடையின்றி ரேஷன் பொருட்கள் […]
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக மாணவர் சேர்க்கை வாரியம் அறிவித்துள்ளது. ஜேஇஇ அட்வான்ஸ் தேவை எழுத தவறியவர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுதலாம் என்று மாணவர் சேர்க்கை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. ஐஐடி கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் அட்வான்ஸ் தேர்வு எழுத இரண்டு முறை வழக்கமாக வாய்ப்படுளிக்கப்படும் இந்நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று 2020ல் அட்வான்ஸ் தேர்வுக்கு இரண்டாவது முறையாக விண்ணப்பித்தும் […]
சிறப்பு ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்ற செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே கூறியுள்ளதாவது:- பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை) மற்றும் அக்14ந்தேதி முதல் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. * சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் To கோவை (வண்டி எண்: 02679) இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் அக்.,14ந்தேதி மதியம் 2.30 மணிக்கு பதில் மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரெயில் […]
சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும்16ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவல் படி:சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்.,16ந்தேதி திறக்கப்படுவதாகவும்.அன்றைய தினம் எவ்வித பூஜையும் நடக்காது என்றும் தெரிவித்துள்ள தேவஸ்தானம் அக்,.17ந்தேதி முதல் அக்,.22ந்தேதி வரை 5நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளோடு தினந்தோறும் 250 பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள தேவஸ்தானம் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் கொரோனா […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 36 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தமிழகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்தில் சென்னையில் தான் அதிக அளவில் கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து இருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று வரை 10 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா […]
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு முதல் பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கால்பதிக்க உள்ளதாக அதன் சிஇஓ எலோன் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான தகவல்:- டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் கால்பதிக்காது எனினும் அடுத்த ஆண்டில் உறுதியாக இந்தியாவில் கால்பதிக்கும் என்று ட்விட்டரில் 2019 மார்ச்சில் எலோன் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் கொரோனாத் தொற்றால் உலகமே முடக்கிய நிலையில் எப்போது இந்தியாவுக்கு வரத் திட்டம் என்று ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு […]
200 ரயில்கள் பண்டிகைக்காலத்தில் கூடுதலாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று உள்ள அண்மைக் காலங்களிலும் 310 சிறப்பு ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வழக்கமான ரயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படாத சூழ்நிலையில் வரவுள்ள பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு 200 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் இன்னும் அதிகளவுல் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து மண்டல் மேலாளர்களுடன் ஆலோசித்து வருவதாக ரயில்வே […]
குரூப் 1 முதல்நிலைத் தோ்வு தேதி குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டதாவது: குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தோ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தோ்வானது, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தோ்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி, குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு அடுத்த […]
தமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து சென்னையில் இருந்து 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மேலும் 7 சிறப்பு இஅரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கே ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் To திருநெல்வேலி, சென்னை எழும்பூர் To செங்கோட்டை, சென்னை எழும்பூர் To மதுரை, சென்னை எழும்பூர் To ராமேஸ்வரம், சென்னை எழும்பூர் To கொல்லம்,சென்னை சென்ட்ரல் […]
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ. 247 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரீபெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 998 சலுகையின் வேலிட்டி மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் இரோஸ் நௌ சந்தா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இது மார்ச் 10-ம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலான […]
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்படுகிறது. திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகள் அறிவித்துள்ளன. தி.மு.க. சார்பில் பூண்டி கே. கலைவாணன் போட்டியிடுகிறார். இதேபோன்று அ.ம.மு.க. சார்பில் எஸ். காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 54 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு […]