நேற்று தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜயாகநாத் அவர்கள் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் விஜயகாந்தை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் தலைவர் விஜயகாந்திற்கு மட்டுமே இருக்கிறது என்றும் , தொண்டர்கள் […]
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை தமிழக பாஜக நடத்த உள்ளது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. சென்னை அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பிரியா குடும்பத்திற்கு அரசு வேண்டிய உதவிகளை செய்ததோடு, சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே, தமிழக முதல்வர்கள், திமுக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரியாவின் குடும்பத்திற்கு […]
காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இந்தி மொழி திணிப்பை ஆதரித்தது கிடையாது. என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார். நேற்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் சந்திப்பில் பேசுகையில், ‘ ஹிந்தி மொழியை கட்டாயம் என பாஜக அரசு கூற வில்லை. அப்படி கூறினால், தமிழக பாஜகவே எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. ‘ என காங்கிரசை குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக […]
ஹிந்தியில் மட்டும் தான் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு கூறினால் தமிழக பாஜக கட்டாயம் அதனை எதிர்க்கும். இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று தான் புதிய கல்வி கொள்கை கூறுகிறது. என பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறினார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்று இன்று தமிழகம் திரும்பிவிட்டார். சென்னை விமானநிலையம் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்து தனது […]