கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும்’ திட்டத்தை தற்போது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்,அன்னை தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 3 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் நாளை முதல் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம்’ தொடங்கவுள்ளது. இந்நிலையில்,அறநிலையத்துறைக்கு சொந்தமான […]