அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள். பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின் அவரது நினைவிடம் வரை சென்று அங்கு மலரஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
1967-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரானார் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் நிறுவனர் அண்ணா.1969 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். இந்நிலையில் அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 3 ஆம் தேதி அனுசரிக்கப்படும்.அதேபோல் இந்த ஆண்டும் அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் செப்டம்பர் 15, 1909 ம் ஆண்டு பிறந்தார். இப்பொழுது இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எனப்படும் மிகப்பெரிய கட்சி உருவாக காரணமாக இருந்தவரே அறிஞர் அண்ணா தான். காலனி ஆதிக்கம் : இந்திய தேசிய காங்கிரசு இந்திய சுதந்திர போராட்டத்தின் போது காலனி ஆதிக்கத்தை மிகவும் வன்மையாக கண்டித்தது. ஆனால் இந்த கட்சி பெரும்பாலும் பிராமிணர்கள், வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக இருக்கிறது என்று பெரியாரால் விமர்சிக்கப்பட்டது. […]
அண்ணா அரசியல் மட்டும் இல்லாமல் பிற துறைகளிலும் காலூன்றி சாதனை படைத்துள்ளார். அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும்,திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார் அண்ணா.இதனால் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார்.அவரின் படைப்புகள், களிங்கரணி,கோமளத்தின் கோபம்,பார்வதி B.A,வேலைக்காரி,நல்ல தம்பி,சந்ரோதயம் ,சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்,குமரிகோட்டம்,ஓர் இரவு சொர்க வாசல், சூர்யாகுமாரி,தழும்புகள்,இன்பஒளி உள்ளிட்டவை ஆகும்.
1967-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரானார் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் நிறுவனர் அண்ணா.1969 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தார். அண்ணாவின் முக்கிய திட்டங்கள்: அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றினார். இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை தமிழக மக்களின், மாணவர்களின் மனதில் கொண்டு, இந்திய முழுவதும் மும்மொழி திட்டம் அமலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொண்டுவந்து தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார். […]
அண்ணா முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். அண்ணா பெரியாருடன் மிகவும் நெருக்கமாக இருந்த நிலையில் அவருடன் முரண்பாடு ஏற்பட்டது.பின் இதன் காரணமாக பெரியாரிடம் இருந்து சென்று 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின் மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இனைந்து உருவாக்கினார். இந்த கட்சியானது குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.
அண்ணாவின் நினைவுநாளையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் அவரது நினைவிடம் வரை சென்று அங்கு மலரஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1967-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரானார் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் நிறுவனர் அண்ணா.1969 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். இந்நிலையில் அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 3 ஆம் தேதி அனுசரிக்கப்படும்.அதேபோல் இந்த ஆண்டும் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.