அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.மேலும்,தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்: “25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்படவுள்ளது.தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார். மேலும்,உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக […]
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான சமீபத்திய தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான அண்மைய தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான கல்லூரிகள் 20 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத கல்லூரிகளும், 20 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி விகிதம் உள்ள கல்லூரிகளும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம். தரமான ஆசிரியர்கள் இல்லாதது, […]