Tag: Anna University Case

மாணவி பாலியல் விவகாரம் : “நான் ஏன் போராட வேண்டும்?” கனிமொழி எம்.பி கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாஜக சார்பில் குஷ்பூ உள்ளிட்டோர் மதுரையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது அவர்களை ஆடுகள் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் அடைத்து வைத்ததாக குற்றசாட்டும் எழுந்தது. பாலியல் சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ, திமுக எம்பி கனிமொழி ஏன் இது பற்றி பேசவில்லை. […]

#BJP 5 Min Read
DMK MP Kanimozhi speak about Anna University Sexual harassment case

பரபரப்பு: ஆட்டு மந்தைகளுடன் குஷ்பு உட்பட பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் அடைப்பு.!

மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில் குஷ்புவும் கலந்து கொண்டார். தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவினர் அறிவித்ததால் முன்னதாகவே மதுரையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தாலும், தடையை மீறி பேரணி செல்லப்பட்டது. அப்பொழுது தீச்சட்டி ஏந்தியும், கண்ணகி வேடமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மிளகாய் இடித்து கண்ணகி சிலைக்கு பூசினர். பின்னர், இதற்கு அனுமதி இல்லை என்று கூறி பேரணி நடத்திய […]

#BJP 4 Min Read
Madurai - Kushboo

“மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்கக் காரணம்” கைதுக்கு பின் சௌமியா அன்புமணி காட்டம்.!

சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள் குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைதும் செய்து வருகிறது. அந்த வகையில், இன்று பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். இதனையடுத்து, சௌமியா […]

#BJP 4 Min Read
Sowmiya Anbumani

“பாலியல் வன்கொடுமையை அரசியலாக்க வேண்டாம்” – பாஜக நிர்வாகி குஷ்பூ!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி தற்போது பெரிய  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக மகளிர் அணி மவுனம் காப்பது ஏன்? என பாஜக நிர்வாகி குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பூ,”ஒரு […]

#Chennai 6 Min Read

யார் அந்த சார்? “நேர்மையான விசாரணை தேவை” திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி தற்போது அதிக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் பெயர் கொண்ட எப்ஐஆர் இணையத்தில் லீக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அந்த எப்ஐஆரில் தான் ‘சார்’ பற்றி குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த பாலியல் விவகாரம் குறித்து  உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]

#Chennai 5 Min Read
VCK Leader Thirumavalavan say about Anna university case

எஃப்.ஐ.ஆர் வெளியானது எப்படி? வருண்குமார் பெரிய அப்பாடக்கரா? – சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் இன்று காலை கைது செய்யப்பட்டு சென்னை பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டார். விடுதலைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தேவையற்ற ஒடுக்கு முறையாக எனது […]

#Arrest 6 Min Read
Seeman - Varunkumar