பிரேசில் : ரியோ டி ஜெனீரியோவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் உள்ள 13 சுறா மீன்களை பரிசோதனை செய்ததில், அவற்றின் தசைகள் மற்றும் கல்லீரலில் கொக்கைன் போதைப்பொருள் கலப்பு கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக இயங்கும் போதைப்பொருள் தயாரிப்பு ஆலைகளில் இருந்து ரசாயனம் கடலில் கலக்கப்படுவதால் இவ்வாறு நிகழ்வதாக கூறியுள்ளனர். ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை நடத்திய இந்த ஆராய்ச்சி, சுறாக்களில் கொக்கைன் இருப்பதை முதலில் கண்டறிந்தது. அதாவது, சட்டவிரோத போதைப்பொருள் ஆய்வகங்களில் இருந்தோ அல்லது போதைப்பொருள் […]
மதுக்கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கெடு. மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. காடுகளில் […]
கால்நடைகளில் ஏற்படும் உடல் தாழ்வெப்பநிலை குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. கால்நடைகளில் உடல் தாழ்வெப்பநிலை ஏற்படுவதற்கு, தேங்கி இருக்கும் தண்ணீரில் கால்நடைகள் அதிக நேரம் இருப்பது உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் என்றும்,அவ்வாறு ஏற்படாமல் இருப்பதற்கான அறிவுரைகளையும் தமிழக கால்நடை பராமரிப்பு துறை வழங்கியுள்ளது. இது தொடர்பாக,கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள் குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “கால்நடைகளில் சாதாரன உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க (101 102.5°F) அளவு (96*F) குறையும் பொழுது அவை […]
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் தற்பொழுது கொரோனா பரவி வருவதால் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தற்போது அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனாவின் வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் நிலையில். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மனிதர்களுக்கே ஆக்சிஜன் இல்லாமல் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மாநில அரசுகள் திணறி வரும் சூழ்நிலையில் தற்போது […]
வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். இன்று மனிதர்கள், விலங்குகளின் வாழிடங்கள் மற்றும் உணவு ஆதாரங்களை அளிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் விலங்குகளும் கூட மனிதர்களின் சுயநலத்திற்காக கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில், கரடி, நரி, […]
மகாராஷ்டிராவில் விலங்குகள் மூலம் பரவும் “காங்கோ காய்ச்சல்” இந்த காய்ச்சலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மகாராஷ்டிரா மாவட்டத்தில் காங்கோ காய்ச்சல் பரவுவதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு பால்கர் நிர்வாகம் இன்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. பொதுவாக காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் ‘கிரிமியன் காங்கோ’ ரத்தக்கசிவு காய்ச்சல் மனிதர்களிடம் உண்ணி மூலம் பரவுகிறது. இந்நிலையில், இது குறித்து கால்நடை வளர்ப்பவர்கள், இறைச்சி விற்பவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகாரிகளுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. மேலும், பயனுள்ள சிகிச்சை […]
கொரோனாவால் கைவிடப்படும் வளர்ப்பு பிராணிகளுக்காக நிதி திரட்டும் நடிகை வரலக்ஷ்மி. கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒருமாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் ஏழை, எளிய மக்கள் தாங்கள் உண்பதற்க்கே உணவில்லாமல் தவித்து வருகிற நிலையில், தங்களது வளர்ப்பு பிராணிகளை அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலையில் திரியும் கால்நடைகளும் உணவின்றி தவித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையிலும், அவைகளுக்கு ஆதரவளிக்கும் […]
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸின் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதர்கள் மட்டுமல்லாது, கால்நடைகளும் உணவில்லாமல் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனா வைரஸில் இருந்து மாக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போல, ஆடு, மாடு போன்ற பல்வேறு கால்நடைக்காலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.