தமிழகத்தில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார். இந்த விடியா திமுக ஆட்சியில் கால்நடைகளுக்கும் மருந்து தட்டுப்பாடு, உடனடியாக நோய்த் தடுப்பூசிகளை வாங்கி, கால்நடைகளைக் காத்திட வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தனக்குள்ள வலி, வேதனைகளை வாய் திறந்து சொல்ல முடியாத அப்பாவி கால்நடைகளின் துயரங்களைக் கண்டறிந்து, அவைகளின் துயர் துடைக்கும் கடவுள்களாக கால்நடை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றுகிறார்கள். […]