சென்னை : செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவேற்காட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஆண்டனி கிளெமென்ட் ரூபின், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், வேலை அல்லது விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் போது அவற்றை பராமரிப்பு மையங்களில் கட்டணம் செலுத்தி சேர்க்கின்றனர். ஆனால், நாட்டில் முறைப்படுத்தப்படாத பராமரிப்பு மையங்கள் […]
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெரும் அனைத்து இடங்களிலும் மத்திய விலங்குகள் நல வாரிய கமிட்டி ஆய்வு மேற்கொள்ளும் என அதன் தலைவர் எஸ். பி. குப்தா தெரிவித்துள்ளார். சென்னை, சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதற்கு விலங்குகள் நல வாரியம் உறுதுணையாக இருக்கும் எனவும் எஸ்.பி. குப்தா தெரிவித்தார். மேலும் சட்டத்துக்கு முரணாக விலங்குகளை கறிக்கடைக்கு விற்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]