அங்கோலாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தூய இளஞ்சிவப்பு வைரம். அங்கோலாவின் வைரங்கள் நிறைந்த வடகிழக்கில் உள்ள லுலோ சுரங்கத்தில் தூய இளஞ்சிவப்பு வைரம் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த 170 காரட் இளஞ்சிவப்பு வைரமானது ‘தி லுலோ ரோஸ்’ என்று கூறப்படுகிறது. மேலும் இது கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களை விட அறிய மற்றும் மிகப்பெரிய வைரமாக கூறப்படுகிறது. இந்த இளஞ்சிவப்பு வைரமானது ஒரு வகை இலா வைரமாகும், இது இயற்கை கற்களின் அரிதான மற்றும் தூய்மையான வடிவங்களில் ஒன்றாகும்.
அங்கோலா நாட்டு தங்க சுரங்க விபத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கோலா நாட்டில் உள்ள ஹம்போ எனும் மாகாணத்தில் தங்க சுரங்கங்களில் சட்டவிரோதமாக பலர் பணியாற்றி வருவதாகவும், இந்த பகுதிகளில் பல முறை விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். அப்போது பேசிய ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை ஆணையர் பிரான்சிஸ் அவர்கள், அங்கோலா நாட்டில் பைலுண்டோ, உகுமா, சின்சென்ஜ், லாங்கோன்ஜோ, காலா, ஷிகாலா, சோலோஹங்கா மற்றும் ஹம்போ […]