அங்கன்வாடியில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அங்கன்வாடியில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், சத்துமாவு வழங்குவது, ஊட்டச் சத்து குறைந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குவது தொடர்பான டெண்டர் விடுவது குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் அரசு பள்ளிகளில் அங்கன்வாடிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதிமுக ஆட்சி காலத்தில் அரசு துவக்கபள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டுப்பாடு சமூகநலத்துறை வசம் சென்றுவிட்டது என பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டு தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் செயல்பட்டு அந்த அங்கன்வாடி மையங்களை செயல்படுத்தவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் மொத்தமாக செயல்பட்டு வந்த 2,381 அங்கன்வாடிகள் மீண்டும் செயல்படும் […]
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி,கல்லூரிகள் செயல்படாமல் இருந்ததை போன்று அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டிருந்தது. எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில்,அங்கன்வாடி மையங்களையும் செப்டம்பர் 1 முதல் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,அதற்கான,வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, […]