டெல்லி: ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 5,39,189 தபால் வாக்குகள் ஆந்திர மாநிலத்தில் பதிவாகியது. இந்த பதிவான தபால் வாக்குகளில், படிவம் 13ஏ-வில், கையெழுத்திடும் அதிகாரி, அவர் கையொப்பம் மட்டுமல்லாது, பதவி மற்றும் முத்திரை இருக்க வேண்டும். ஆனால், அந்த விதிமுறையை தளர்த்தி ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு […]
சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத்திற்கு சுற்றுலா நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். 8 மாவட்டங்களில் N.I.A அதிகாரிகள் சோதனை..! ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஒரு லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அந்த சமயம் அந்த பகுதியில் வந்த லாரி இந்த […]
இன்று (பிப்ரவரி 6, 2024) ஆந்திராவில் வாகன சோதனையில் காவலர் ஒருவரை செம்மர கடத்தல் கும்பல் கார் ஏற்றி கொலை செய்தது முதல், டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனை வரையில் பல்வேறு தகவல்களை இதில் காணலாம்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல்கள் அதிகமாக ஒலிக்க ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவை அந்நாட்டு மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டும் விட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல்… வாக்காளர்களுக்கு துரோகம்.! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.! அதேபோல, மற்ற மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அந்தந்த மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் […]
இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல்தான் நினைவுக்கு வருகிறது என இன்போஸிஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார். பிரபல மென்பொருள் சேவை நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அண்மையில், ஆந்திரா, விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம்நகரில் தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடபட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் […]
ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா வாகனத்தை வழிமறித்து பவன் கல்யாண் கட்சியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, 25 பேரை கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சி அமைச்சராக இருக்கிறார் நடிகை ரோஜா. இவர் தலைமையில் விசாகா பகுதியில் ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகர் வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டம் முடிந்த பிறகு, ரோஜா விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது , நடிகர் […]
கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகள் கட்ட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை மாநகரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும், கொற்றலை ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கான வேலைகளில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட தொடங்கினார். கொற்றலை ஆறு ஓடும் பெரும் பரப்பளவில் சிறிய பகுதி மட்டுமே ஆந்திராவில் இருக்கிறது. […]
ஆயிரம் கிலோ மீன்கள், காய்கறிகள் என மருமகனுக்கு மாமனார் சீர் கொடுத்து அசத்தியுள்ளார். தமிழக மக்கள் ஆடி மாதத்தில் மணமகன் வீட்டிற்கு ஆடி சீர் கொடுப்பது வழக்கம். அதேபோல், தெலுங்கு மக்கள் தெலுங்கு மாதமாக இருக்கக்கூடிய ஆஷாதம் மாதத்தில் பொனாலு என்ற விழாவை கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் திருமணமான மகளுக்கு சீர் கொடுத்து அனுப்புவது வழக்கம். இதேபோன்று ஒருவர் தனது மருமகனுக்கு சீர் கொடுத்து அசத்தியுள்ளார். புதுச்சேரியில் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள ஏனாம் மாவட்டத்தை சேர்ந்த பவன்குமார் […]
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் ஒரு அரிய மீன் சிக்கியுள்ளது. இதன் விலை ரூ.2.40 லட்சம். ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் அங்கிருக்கும் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். எப்போதும் போல் நேற்றும் மீன் பிடிக்க கோதாவரி ஆற்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களது வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. இதனை பார்த்த மீனவர்கள் இதை கரைக்கு கொண்டு வர முடிவு செய்தனர். பிச் என்ற வகையை சேர்ந்த இந்த மீன் அரிய வகை மீன். மேலும் இந்த […]
நதிக்கரையோரம் இரவில் தனது வருங்கால கணவரை சந்திக்க சென்ற பொழுது, மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செவிலியர். ஆந்திராவில் விஜயவாடா பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரோடு திருமணம் நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதியன்று தனது வருங்கால கணவரை இரவில் கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திக்க சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், மர்ம கும்பல் இவர்களை தாக்கியுள்ளது. வருங்கால கணவரை பயங்கரமாக தாக்கி அங்கே கட்டி […]
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் பலரும் பாதித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு அருகில் முத்துக்கூறு என்ற கிராமத்தில் ஆனந்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கொரோனாவுக்கு இலவசமாக ஆறு விதமான ஆயுர்வேத மருந்தை வழங்கி வருகிறார். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா சரி ஆகிறது என்ற செய்தி அம்மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டதால் கொரோனா நோயாளிகளும், பொதுமக்களும் இந்த மருந்தை வாங்கி செல்ல கூட்டம் கூட்டமாக அந்த இடத்திற்கு குவிந்து […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்.ஜி பாலிமார்ஸ் தொழிற்சாலையில் இருந்து நேற்று முன்தினம் வெளியான விஷவாயுவால் அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல் போன்ற உடல் பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1000-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையை அங்கிருந்து […]
தமிழகத்தில் முதற்கட்டமாக 30 ஆந்திர மாநிலத்தவர்கள், 20 கேரளத்தவர்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கபட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுதும் கடந்த 4ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட மற்ற இடங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. தமிழக போக்குவரத்து கழகத்திடம் 1082 சொகுசு பேருந்துகள் உள்ளன. இதில், சிலவற்றின் மூலம் மட்டும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், அரசு அதிகாரிகளை மட்டும் அழைத்து வர பயன்படுத்தப்பட்டு […]
தொடர்ந்து டிக் டாக் வீடியோ பதிவேற்றி வந்துள்ளதால் கணவன் மனைவி இடையே பிரசனை எழுந்து வந்துள்ளது. இதனால் கோபமடைந்த கணவன், தன் தம்பியுடன் இணைந்து மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டார். ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன நரசையா. இவருக்கு சுவர்தா (19) என்கிற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் இருந்துள்ளனர். சுவர்த்தவிற்கு டிக் டாக் உபயோகப்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது. அதிலும், தினமும் பல விடீயோக்களை பதிவேற்றம் செய்யும் அளவிற்கு […]
9 மாத பச்சிளம் குழந்தை மற்றும் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் கைது ஆந்திராவில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மனைவி மற்றும் 9 மாத கைக்குழந்தையையும் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர். பிரகாசம் மாவட்டம் லிங்ககுண்டம் கிராமத்தில் கடந்த 3 ம் தேதி அன்று சாலையோரம் இளம்பெண் மற்றும் கைகுழந்தையுடன் எரிந்த நிலையில் சலமாக கிடந்துள்ளது.தகவல் அறிந்து வந்த […]
அண்மையில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதே போல சந்திர பாபு நாயுடு மகனுக்கு மாவோயிஸ்ட் மிரட்டல், செம்மரகடத்தல் கும்பல்களின் மிரட்டல் இருந்ததால் கொடுக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. […]
வடமாநிலங்களில் கள்ளச்சாராயம் மக்களின் உயிரை காவு வாங்கி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. ஆந்திர மாநிலத்தில் சாராயம் என்று குடித்தவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வடமாநிலங்களில் கள்ளச்சாராயம் என்பது மக்களின் உயிரை அடிக்கடி எடுக்கும் ஒரு மிகப்பெரிய தீங்காக இருக்கின்றது.இதை அரசாங்கமும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டும் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது. சமீபத்தில் கூட அசாம் , உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேஷத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆந்திர […]