கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை பாதி வழியிலேயே விட்டு சென்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர். ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த திருவுரு மண்டலத்தில் உள்ள முனுகுல்லா கிராமத்தில் வசிப்பவர் ஷேக் சுபானி (40), இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை, அவர் கோவிட் பரிசோதனைக்காக ராஜுகுதேம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிய நிலையில், சுபானி மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அமராவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையை அவர் அடைந்த நிலையில், அவர் இறந்து […]
ஆந்திராவில் ராசாயன ஆலையில் தீ விபத்து. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ள, பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் உள்ள உலகைளில் ஒரு உலை வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்து நடந்த போது, அங்கு 4 பேர் பணியில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் அந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விசாகப்பட்டினத்தின் புறநகரில் உள்ள பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் […]
ஆந்திராவில் ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், பல மாநிலங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திராவில், கொரோனா வைரசால் பள்ளிகள் அனைத்து மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளையும் புதுப்பிப்பதற்கான திட்டத்தை ஒரே நேரத்தில் அறிவித்து நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் […]
ஆந்திராவில் ஒரு தொழில்சாலையில் அமோனியா வாயு கசிவு. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருக்கும், ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தென் கொரிய நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையில் கடந்த மாதம் விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையிலிருந்து, ‘ஸ்டைரீன்’ என்ற விஷவாயு கசிந்தது. தொழிலாளர்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியில் ஈடுபட்டதால், விஷவாயு கசிவால் அவர்கள் பாதிக்கப்படவில்லை, விஷவாயு கசிந்ததும் அவர்களுக்கு தெரியவில்லை. அது காற்றில் கலந்து, 3 கிலோ மீட்டர் துாரம் பரவிய நிலையில், இதனால், ஐந்து கிராமங்கள் பாதிக்கப்பட்டன. […]
அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை. இந்தியா முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால், 4,37,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,975 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள், அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் நோய்தொற்று ஏற்பட்டவர்களை களங்கப்படுத்தும் விதத்தில் […]
ஆந்திராவில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அட்டகாசமான திட்டம். ஆந்திராவில் உள்ள அரசுப் பள்ளிகளின் முழுமையான கட்டமைப்புக்களுக்காக, ‘மன பாடி நாடு-நேடு’ திட்டம் சில சுவாரஸ்யமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு அனைத்து அரசு நிறுவனங்களையும், மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க ஒரு மெகா திட்டத்தை தொடங்கியுள்ளது. முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தின் முதன்மை திட்டமான நேற்று – இன்று திட்டத்தின் மூலம், 15,715 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதுப்பிக்கப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த […]
ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை இந்த தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷவாயு கசிவு அங்கிருந்து 3 கி.மீ தூரத்திற்கு பரவிய நிலையில், இந்த கசிவினால் அப்பகுதிவாசிகள் இடையே, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சாலையில் சென்ற […]